சுற்றுப்புற சூழல் காப்போம்

இயற்கையை நீயும் காத்திடு
இன்பம் அனைத்தும் பெற்றிடு
மரங்களை நீயும் காத்திடு
மாசு அனைத்தும் நீக்கிடு
இறைவன் அளித்த கொடையாம்
இயற்கையை நீயும் காத்திடு
தொழிற்சாலை நாச்சிலிருந்து
இயற்கையை நீயும் காத்திடு
நீரையும் நீர்நிலைகளையும்
போற்றி நீயும் காத்திடு
சொர்க்கம் தேடி அலையாதே
அது நம் பூமி என்பதை மறவாதே
காற்றை நீயும் மாசுபடுத்தி
நகரத்தை நரகம் ஆக்காதே
தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் நாம்
நாளை காற்றையும் காசு கொடுத்து வாங்குவோம்
விளைநிலங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைத்தோம்
வீடுதோறும் மாடித்தோட்டம் போட்டு பயிர் வளர்க்கின்றோம்
இன்றைய தலைமுறைக்கு சுற்றுப்புறத்தை காக்க காத்துக்கொடு
இல்லை என்றால்
நாளை அருங்காட்சியகத்தில் சென்று காண்பிக்கும் நிலை வரும்
ஆறுகளையும் குளங்களையும் காக்க மறந்தோம்
இயற்கை வளங்களை அழித்தோம்
தண்ணீருக்காக கையேந்தி நிற்கின்றோம்
இயற்கையின் கொடை நீர் இல்லை என்றால்
இவ்வையகம் பாலைவனமாகும்
வானம் வழங்கிய கொடை இவ்வையகம் செழிக்க
தனி ஒரு மனிதனுக்கானது அல்ல
சாலையை சோலையாக்கி
வாழும் இடத்தை பசுமை ஆக்கி
மாசை நீயும் கட்டுப்படுத்து
மரங்களின் அருமை நிழலில் தெரியும்
நீரின் அருமை தாகத்தில் தெரியும்
நேசத்தின் அருமை பிரிவில் தெரியும்
இயற்கையின் அருமை வெறுமையில் தெரியும்
தேடி ஓடி சேர்த்த பொருள் எல்லாம் உயிர் காக்குமா
பொன் பொருளை உண்ணாதான் குடிக்கத்தான் சுவாசிக்கத்தான் முடியுமா
நீ இயற்கையை அழித்தால் அது உன்னை அழித்துவிடும்
மரம் செடி கொடிகளில் வாழும் உயிரினம்
மரங்கள் இன்றிப்போனால் அழியும் அழிவது மனித இனமும் தான்
ஆளுக்கு ஒரு மரம் நடுவோம் ஆண்டுக்கும் பலன் பெறுவோம்
நீ இன்று மரம் நட்டால் நாளை உன் சந்ததி நலம் பெரும்
சேவல் மயில் குயில் கூவ கேட்டு எழுந்தோம்
இன்று வாகனத்தின் ஒலி கேட்டு எழுகின்றோம்
காற்றை மாசு படுத்தி நீரை மாசு படுத்தி
சுற்றுப்புறத்தை காக்க தவறிவிட்டோம்
சிறு செடிகளையாவது வைத்து சுற்றுப்புறத்தை பசுமை ஆக்குவோம்
இரசாயன உரத்தை பயன் படுத்தி பயிர் விளைவித்து
-நஞ்சை உண்கின்றோம்
பாரம்பரியத்தை மறந்து மருத்துவமனை நோக்கி ஓடி
இல்லாத வியாதிக்கு மருந்தை தேடி
இறுதியில் இயற்கையை நாடி இல்லை வியாதி என்று சொல்ல
மனமும் குளிர்ந்து காசும் மிஞ்சியது
சுகமாய் வாழ சுற்றுப்புறத்தை காத்திடு
நலமாய் வாழ நான்கு மரங்களை நட்டிடு
வீடும் நாடும் செழிக்க சுற்றுப்புறத்தை காத்திடு
மண் இயற்கையின் உடல்
மரம் இயற்கையின் நுரை ஈரல்
நீர் இயற்கையின் இதயம்
மண் வளம் காப்போம் நீர் வளம் காப்போம்
தூய காற்றை சுவாசிப்போம் ஆரோக்கியமாக வாழ்வோம் !

- கோவை உதயன்.

எழுதியவர் : கோவை உதயன் (8-Mar-18, 10:36 pm)
பார்வை : 2111

மேலே