அன்னை பிறந்தநாள்

இணையம் தாண்டியும் இதயம் இணைத்து
கூட்டுக் குடும்பம் கொடுத்த என் கருவறையே
என்ன சொல்லி வாழ்த்துவேன்!!!!!

சிதறிக் கிடந்த எங்களை
சிந்தாமல் சிதறாமல்
களங்கமில்லா அன்பு கொண்டு
தளும்பத் தளும்ப நிரம்பச் செய்த குணத்தையா?

நேசக் கோட்டைக்குள்
கோலோச்சி நிற்கும் உங்கள்
பாசப் பாசறையிலே
சுகமென எங்களை தூங்கிச் சுமக்கும் நெஞ்சத்தையா?

வானெங்கும் சுற்றித் திரியினும்
மண்ணுக்கு மழையை மறவாது தரும் மேகம் போல்
எங்கெங்கு போனாலும் அங்கங்கே தவழ்ந்திடும்
ஆசீர்வாத தாய் உள்ளத்தையா?

தாய் ஆன போதும்
சிறுபிள்ளை போல் ஏக்கத்தோடு பிள்ளைகளின்
பாசத்திற்காய் காத்து நிற்கும் குழந்தை மனதையா?

என்ன சொல்லி வாழ்த்துவேன் என் அன்னையை?

அன்பின் அவதாரமே
அக்கறையின் அச்சாரமே
பண்பின் சிகரமே
பாசத்தின் புனிதமே
உற்சாகத்தின் உயரமே
உள்ளதைச் சொல்லும் உன்னதமே
நம்பிக்கை அரசியே
நலம் நாடும் தவசியே
தன்னலம் இல்லா தாய்மையே

நீங்கள் பிறந்த பொன்னாளில்
எல்லாமே நன்றாக வென்றாக வேண்டுமென
வாழ்த்துகிறேன்.

நலமோடும்,வளமோடும்
சீரோடும்,சிறப்போடும்
தமிழோடும்,ஒளியோடும்
நீங்கள் வாழ்க!

புன்சிரிப்பு மாறாமல்
புது வேகம் குறையாமல்
புதுப்பாதை நிறைவோடு
பல்லாண்டு வாழ்ந்திருக்க
வாழ்த்த வயதில்லை என்ற போதும்
வணங்கி வாழ்த்துகிறேன்.........

எழுதியவர் : (9-Mar-18, 10:12 am)
Tanglish : annai piranthanaal
பார்வை : 2639

மேலே