சுப்பலக்ஷ்மி கோலங்கள்

என்புத்தோல் போர்த்திய
நற்கிழவி என் தாய்...
ஒவ்வொன்றாய் நீட்டினேன்
பாரம்மா இவற்றை...
காலச்சுவடு இதிலும்
கணையாழி இதனிலும்
கவிதை வந்துள்ளது.
படித்துக்காட்டினேன்..
பாத்திரம் தேய்த்து
தொய்ந்த விரலினால்
தடவிப்பார்த்தாள்..
நெடுகிய புன்னகையில்
வாசித்துப்பார்த்தாள்...
கைபேசி இணையத்தில்
வந்த கவிதையை
உற்றுப் பார்த்தும்
ஒன்றும் தெரியவில்லை.
பார்த்தே ரசித்தாள்.
அர்த்தங்கள் தேவையின்றி...
என் மனம் நிறைந்தது.
வாசலில் நின்றிருந்தேன்.
என்னை கேலி பேசின...
ஒருநாளும் பார்த்து
ரசிக்காத அவள்
போட்ட கோலங்கள்...

எழுதியவர் : ஸ்பரிசன் (9-Mar-18, 12:43 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 167
மேலே