புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
சக்தியுள்ள உயிர்களெல்லாம்
பலசாலியானதில்லை

நேத்திரம் இல்லாதவர்
பார்வையற்றுத்திரிவதில்லை
நேத்திரம் இருந்து கொண்டும்
குருடராக பலர் திரிவதும் உண்மை

மித்திரன் இல்லா வாழ்வு
மெத்தையாகிப்போகும்
சத்தியங்கள் இல்லாவிட்டால்
சாந்தி எவ்விடம் நிகழும்

பக்தியுடைய மனிதரெல்லாம்
கடவுளைக்காண்பதில்லை
பித்தனாக திரிந்தாலும்
சாத்தானாக கடவுள் அவரை ஒதுக்குவதில்லை

விந்தை என்ற அகங்காரம்
கொண்டு அலைபவரெல்லாம்
சந்தையில் விலையாகிப்போகும்
எதிர் காலம்

திருவுளம் கொண்டு
திருப்பணி செய்தால்
திருந்தலரும் கைகட்டி நிற்பார்
உங்கள் முன்னிலையில்

பொங்கி நீ எழுந்தாலும்
புயலைப்பிடிக்கப்போவதில்லை
பொறுமையுடன் நேர் வழியில் சென்றாலும்
பொன்னுலகமும் சென்றிடலாம்

அதிகாரத்தால் அன்பை ஆளமுடியாது
அன்பாலே அகிலமும் ஆளலாம்
தெரியாததை தெரிந்தவரிடம்
கற்றுக்கொள்ள வேண்டும்
பேரறிஞர் என்ற பெருமை
கொண்டு திரிதலாகாது

எழுதியவர் : மட்டுநகர் (9-Mar-18, 3:02 pm)
பார்வை : 102

மேலே