முரண்பட்ட காதலன்
கலியுக காலத்தில் ஷாஜஹானின் காதலும் சலிப்படைய வைக்கிறது
ஜெபாவின் கவிதை புத்தகத்தில்..
காலம் மாறிய காதலும்
காதல் மாறிய தருணங்களும்
சாபகேடின் வாசற்படியே-இன்றும்
சிந்தனையின் செயலாக்கமும்
சிரித்து பேசும் ஆனந்தமும்
காற்றில் பறக்கும் பதரே-இன்றும்
ஆழ்மணதின் தேடலிலும்
சில துளி உண்மை காதல்கள்
தண்ணீரில் எழுதிய கவிதைகளே-இன்றும்
தெகடாத காம சிந்தனையும்
தெகிட்டிய காதலும்
கண்ணீர் தேசத்தின் பூக்களே -இன்றும்
முரண்பாடற்ற கவிகளும்
முற்படுத்தபட்ட சிந்தனைகளும்
போதுமானது என் சுயசரிதைக்கு..
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
