தமிழும் நானும்

செந்தமிழின் செங்கடலில் செம்மீனாய் மிதந்திடுவேன்
தீந்தமிழின் தீப்பிழம்பை தீண்டித்தீண்டி மகிழ்ந்திடுவேன்
பழந்தமிழின் பல்சுவையை பருகிதினம் பசியாறிடுவேன்
பைந்தமிழில் பைங்கிளிபோல் பைத்தியமாய் உளறிடுவேன்
தேந்தமிழே தேடியுனை தேசமெல்லாம் அலைந்திடுவேன்
எந்தமிழே என்னுயிராய் என்றும்உனை நினைத்திடுவேன்
தனித்தமிழின் தத்துவத்தை தசைகள்தோறும் நிறைத்திடுவேன்
தாய்த்தமிழின் தனித்துவத்தை தரணிக்கு உணர்த்திடுவேன்
முற்றமிழின் முத்தழகை முப்பொழுதும் ரசித்திடுவேன்
பொற்றமிழின் பொழிர்மழையில் பொழுதெலாம் நனைந்திடுவேன்
சிற்றமிழின் சிறுவிதையை சிந்தையெலாம் விதைத்திடுவேன்
நற்றமிழின் நதிக்கரையில் நாணலென வளர்ந்திடுவேன்
வற்றமிழின் வானவில்லில் வர்ணமென வளைந்திடுவேன்
எழிற்றமிழின் எழுச்சிதனை எரிமலைக்கும் உரைத்திடுவேன்
கொற்றமிழே கொடுயென்றால் கொன்றென்னுயிரையும் கொடுத்திடுவேன்- உனக்காக..!!

எழுதியவர் : அருணன் கண்ணன் (9-Mar-18, 3:27 pm)
பார்வை : 632

மேலே