மாதவியின் மாங்காப்பகழ்

அழகு நிலவு போல் அந்த ஆனந்த சுந்தரி
இலகு மனம் கொண்டவள்
அழகால் ஆடவர் கவர்ந்தாள் மஞ்சரி
மாணிக்க முத்து மணி மாலையை முன்னிறுத்தி
மன்னனின் அரங்கினிலே
மாட மயில் தோகை விரித்து ஆடுவது போல்
மங்கையவள் மாதவி நாட்டியம் ஆடிட
மனதெல்லாம் மங்கலமாய் நிறைந்தாள்
மையலும் கொண்டான் மனைவியை மறந்து
மாலை அணிவித்து மனைவியாய் ஏற்றான்

தாசி குலதில் ஜனித்திட்ட போதிலும்
தாசியைப்போலவள் இருந்ததில்லை
பதியுடன் பதிவிரதையாய்
நித்தியா புகழ் ஓங்க
புத்திரியும் ஈன்றாள்
மாணிக்க மணி ஒளி போன்று
ஓங்கியே இருந்தது அவள் புகழ் உலகெல்லாம்

ஆடற் கலை அரசன் நடராஜ பெருமான் போன்று
ஆட வல்லவள் மாதவி
பதினொரு வகை ஆடற்கலையும்
அழகாக நயனம் தருபவள் ஆனந்த சுந்தரி
நாடெல்லாம் அவள் நாட்டிய தாரகையாக
புகழ் வீசின
அவள் நாட்டிய அழகிலும் வதன அழகிலும்
நாடாண்ட மன்னனும் மதிகலங்கிப்போயின.

முற்பிறப்பிலே மாதவியும் கோவலனும்
கணவன் மனைவியாய் வாழ்ந்தார்கள்
எண்ணை விற்கும் வாணிபனாக கோவலன்
அயலூர் அரசனின் ஆணைக்கு ஏற்று
அம்பாளின் ஆலயம் அடைபட்டுக்கிடந்தது
அறியாத வாணிபன்
எண்ணெய் முழுவதும் வோனினியானால்
அம்பாளே நான் உனக்கு விளக்கேற்றுவேன் என
நேர்த்தி வைத்தான்
அம்பாளின் திரு அருளால் அன்றைய நாளில்
எண்ணெய் யாவும் எண்ணியது போல்
வோனியானைதை எண்ணியே அம்பாளுக்கு
விளக்கினை ஏற்றி வணங்கினான்

வேந்தனின் ஒற்றன் விடுத்த தகவலை அறிந்து
மரண தண்டனை விதித்தான்
மணாளன் வராததை எண்ணி மனம் நொந்து
கிடந்தவள் நெஞ்சில் வேலென பாய்ந்த செய்தியை
அறிந்து
அம்பாளின் சந்நிதியில் சபதமும் பூண்டு
தானும் அவ்விடம் உயிர் தரித்தால்
அம்பாள் கண்ணகியாக மானிட அவதாரம் கொண்டாள் எண்ணையத்தேவர் கோவலனாகவும்
வியாபாரியின் துணையாள் மாதவியாகவும்
மண்ணில் அவதரித்தனர்

இப்பிறப்பினிலும் இருவரும் இணைய விதி செய்தது
மன்னனின் மதியை விதியாக்கி
விழுங்கியது
பதியவள் சாபம் நீங்கியது கண்ணகி கடவுளானாள்.

மட்டுநகர் கமல்தாஸ்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (9-Mar-18, 2:57 pm)
பார்வை : 70

மேலே