மார்ச் - 8
வழக்கம்போல் பொழுது விடிந்தது,
பரபரப்பான காலை வேலையில்
நானும் அவளும் முகத்தைக் கூட
பார்த்துக்கொல்லாமல் அவரவர்
அபிப்ராயங்களை அரங்கேற்றிக்
கொண்டோம்.
மகளை போராடி,
பாடி யாடி பள்ளி வாகனத்தில்
பத்தி விட்டாகி விட்டது.
அவளும் அலுவலகத்திற்கு
பஞ்சாய் பறந்துவிட்டாள்.
நாளிதழை நுனிப்புல் மேய்ந்துவிட்டு,
கடிகாரத்தை கண்டும் காணாமல்,
கால்போன போக்கில்,
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாய்
பல முறை அளந்து விட்டு,
அதே அலுவலகத்திற்கு - அலுப்பை
முகத்தில் காட்டிக்கொள்ளாமல்
அடியெடுத்து தெருவில் நடக்கிறேன்.
கொஞ்சமும் மாற்றத்தை விரும்பாத
எங்களின் தெரு,
அதே தோற்றத்தை சுமந்து கொண்டிருந்தது - லேசாக
சலிப்பு தட்டியது.
தெருமுனையில்,
பிளாஸ்டிக் கன்டைனர் குப்பை தொட்டி,
நிரம்பி வழிந்து, காய்ந்த சருகுகள்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அலங்கரித்து இருந்தது.
அடிக்கடி நகர்த்திய சுவடோ,
தடமோ தென்படவில்லை.
சுளீரென்று உஷ்ணம் உள்தேகத்தை
பதம்பார்த்து.
நடு முதுகில் பல மாதங்களுக்கொரு முறை
டப்பென்று பூக்கும் டூலிப் பூக்கள் போல,
வியர்வை துளிகள் கொப்பளித்து பூத்தது.
மெயின் ரோடு அடையும் தெருவில்,
ஏதோ வித்தியாசமாக இளம் பெண்கள்,
பல பல பட்டுப் புடவையில்,
விரைத்த கம்பிகளாய் அவிழ்த்து விட்ட
கரு கரு முள்குட்சி முடிகளில்
மலர்கள் சூடி,
கள கள வளையல் பூட்டி,
பார்த்ததே இல்லை.
என் அலுப்பும் சலிப்பும்,
ஆனந்தமும் சந்தோஷமுமாய்
மாறியது.
பின் தொடர்தேன்.
கழுத்தில் டெரகோட்டா சங்கிலியோடு
அலுவலக அட்டையும் தொங்கிக்கொண்டிருந்தது.
பஸ் நிறுத்தத்தில்,
அவர்களும் நின்றனர்,
நானும் சற்றருகில் நின்றுகொண்டேன்.
அந்த கும்பலில் ஒருத்தி,
ஓவர் மேக்கப்,
சம்பந்தமில்லாத லிப்ஸ்டிக்,
ஹை ஹீல்ஸ் செருப்பு,
வெடிப்பேறிய குதிங்கால் துருத்தியபடி,
காதில் ஹெட் போனில் பேசியபடி இருந்தாள்.
ஏம்மா தூங்கலையா?
என்ன சொல்லுறான்?
பாலும் குடிக்கலயா?
அழகை வேறயா?
இந்த மாசம் புனித வெள்ளிக்கு லீவுதான்,
மூணு நாள் வரேன்னு சொல்லுமா.
ம்ம் சாப்பிட்டேன் சாப்பிட்டேன்!
ம்ம் கெளம்பியாச்சு!!
போன் பேசியவுடன்,
அருகில் இருந்தவள் இவளிடம் பேச ஆரம்பித்தாள்...
ரீட்டா நேத்து நைட் லைவ் ரிலீஸ்,
வீடு வர பன்னிரண்டு மணி யாகிடிச்சு,
மாமியார் ஒரே சண்டை.
இவரும் கூட சேர்ந்துக்கிட்டு இந்த டீம்விட்டு,
வேற டீம் போக சொன்னாலும் கேட்க மாடீங்கிறா அம்மான்னு,
போட்டு விட்டுட்டார்.
மணி மூணு வரைக்கும் ஒரே ட்ராமாவா போச்சுன்னு
சிரிச்சா...!
பஸ் வந்து,
அனைவரும் ஏரியாகி விட்டது.
பஸ் முழுதும் பெண்கள் வித வித
ஆடைகளில் ஜொலித்தனர்.
முன் இருக்கையில் ஒரு நண்பர்,
பஸ்சில் செல்வது மறந்து சத்தமாக
தன் மனைவியிடம் போனில்,
சண்டை போடுகிறார் போலும்..
என்னவென்று உற்று கவனித்தால்...
அதான் ஆறு மாசம் ஆச்சே கரு கலஞ்சு,
நல்ல தெளிவா தான இருக்க,
ஏன் முடியாது முடியாதுன்னு மாரடிக்கிற,
கொழந்த வேணும்!
நீ வேலைக்கு போனா என்ன?
வேலையோட வேலையா இதுவும் பிளான்
பண்ணலாம்!!
இதுக்கு மேல எதாவது மொரண்டு புடிச்சா,
எங்கம்மாட்ட சொல்லிட்டு,
நான் கைய விரிச்சிருவேன்னு கட்பண்ணிட்டார்!
அருகில் இருந்தவர்,
ஹலோ கேட்குது, கேட்குது,
ஆமா ரெஸ்பான்ஸ் நாளைக்குள்ள
சப்மிட் செய்யணும்,
ஓ ! இன்னைக்கும் நீங்க வீட்டிலிருந்து
வேலை பாக்குறீங்களா?
ஓ! உங்க பையனுக்கு காய்ச்சலா?
சரி சரி! நல்லா பார்த்துக்கோங்க,
பை பை!
எல்லாம் தலையெழுத்து,
அடிக்கடி ஆபீசுக்கு வராம,
வீட்டுலிருந்து வேலைன்னா என்ன அர்த்தம்?
அப்ப நம்பள மாதிரி ஆம்பளக்கெல்லாம் லூசா?
ன்னு என்கிட்ட கேட்குறார்!
நானும் கரெக்ட்டு தாங்கன்னு சொல்லிட்டு,
இன்னைக்கென்ன விஷேசம்?
ஓ! அதுவா, காலைல நான்
ஜிம் க்கு போயிட்டு வரும்போது ஒருத்தர்
சொன்னார், மகளிர் தினமாம்!
ஓ! அப்படியா?
நமக்கேதாவது இப்படி டே இருக்கா?
ஆ ஊன்னா ஒரு டே பெண்களுக்கு மட்டும்!
நல்லா ஷாப்பிங் பண்ணனும்,
வித விதமா காஸ்மெடிக்ஸ் போட்டுக்கணும்,
அப்படியே மினிகிட்டு ஆபீஸ் வரணும்...!
அருகில் இருந்தவர் கண்ணயர்ந்தார்...
நின்று கொண்டு வரும் பெண்களை
நோட்டமிட்டேன்!
பெரும்பாலான பெண்கள்,
சுமார் பத்து வருடங்கள் இதே அலுவலகத்தில்
பணி புரிபவர்களாய் இருந்தனர்.
ஒவ்வொருவரும் மூப்பு தட்டி,
அதை மறைக்க மேக்கப்,
ஹேர் ஸ்டைல்,
ஹாண்ட் பேக்ஸ்,
லோ ஹிப் சாரீஸ்,
ட்ரெண்டிங் ப்ளௌஸ்
ஹை ஹீல்ஸ் செருப்புகளென
இருந்தனர்.
பத்து வருடம் முன்பு,
அத்தனை கனவுகளோடும்,
அருமையான உடல் கட்டமைப்போடும்,
கவலைகள் ஏதுமின்றி,
நினைத்ததை செய்தபடி,
சுதந்திரமாக,
தெளிவோடும்,
பூரிப்போடும் இருந்தவர்கள்
இன்று தொலைந்து போய்விட்டனரோ?
எங்கே அவர்கள்?
ஏன் இப்படி?
எது இப்படி மாற்றிற்று?
விடை தெரியாமல்,
வழக்கம் போல வாட்ஸாப்ப் சென்றேன்...
எத்தனை எத்தனை
மகளிர் தின வாழ்த்து மடல்கள்,
அனுப்பிய பெரும்பாலானோர்
ஆண்கள்?
மகளிரை போற்றும் ஆண்கள் இருந்தும்
இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?
அந்நியன் அம்பிபோல்
அடுத்தவருக்கு வாழ்த்து சொல்லி,
அவனவன் வீட்டில் அசுரனாய் இருப்பானோ?
யோசித்து பார்த்தால்,
ஓவொரு ஆண்களின் லட்சியத்திற்கு,
பெண்கள் துணை போனால் - அவள்
அங்கே மதிக்கப் படுகிறாள்..
இல்லையேல் சபிக்கப் படுகிறாள்!
கையிலிருந்த தினசரியில்,
முதல் பக்கம்,
"கற்பிணிப் பெண் உஷா,
வாகனத்தில் இருந்து உதைபட்டு கீழே விழுந்து,
பரிதாபமாக இறப்பு !!! "
வேகமாய் சென்றிருந்த வாகனம்
நின்றது..வெளியில் எட்டிப் பார்த்தால்,
சவ ஊர்வலம், கூட்டமோ கூட்டம்...
ஊர்தியில் இருந்தது அஸ்வினி !