கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா

டவுனுக்கு ஒரு வெகுளி மனிதர் வீட்டிற்கு
சில சாயங்கள் வாங்க சென்றார். நடுப்பகல்
வேளை, வேலையெல்லாம் முடித்துக்கொண்டு
டவுன் பஸ் ஸ்டான்ட் நோக்கி செல்கிறார்...
வழியில் 'ஸ்ரீ கிருஷ்ணா பவன் - உயர்தர
சைவ உணவு ஓட்டல்" போர்டு பார்த்து , நல்ல பசி
உள்ளே நுழைகிறார்.........

கல்லாவில் இருந்த ஓனரும் இவரை வரவேற்றார்...
மறைந்துவரு டவுன் உபசரிப்பு இது...

ஒரு டேபிளில் உட்கார்ந்தார் நம்மவர் வெகுளி...

அப்போது ரேடியோவில் வந்து ஒலித்தது
ஒரு பழைய தமிழ் சினிமா பாட்டு............

"கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா, கிருஷ்ணா
கீதய்யின் நாயகனே , கிருஷ்ணா, கிருஷ்ணா...

இதைக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்த வெகுளி
தன்னை அறைந்த நிலையில் இருந்தார் சற்றே
அப்போது, அங்கு வந்த சர்வர், "ஐயா, என்ன சாப்பிடுகிறீங்க
சாப்பாடு ரெடி என்றார்.......

காதில் இது விழுந்தது, நம் வெகுளி சற்றே
கீதாயக்கத்தில் " கிருஷ்ணா கேட்டதையெல்லாம்
கொடுப்பவனல்லவா நீ , எனக்கு ஒரு நல்ல
சாப்பாடு தருவாயா, காசு கையில் இல்லை நாளை
தந்திடுவேன்...... கிருஷ்ணா " என்றான்

சர்வர் இதை கல்லாவில் இருந்த முதலாளியிடம்
தெரிவிக்க, அவர் விரைந்து சென்றார் அங்கு
வெகுளியை நோக்கி.. அதற்குள் தன்னிலைக்கு வந்த
அவன், முதலாளியை நோக்கி 'ஐயா பசிக்குது கையில்
காசு ஒரு ப்ளட் இட்டிலிக்கு தான் இருக்கு அது தாங்க
என்றான், நினைவு திரும்ப........
இங்கிதமாய் வெகுளியின் ஏழ்மை அறிந்த முதலாளி
" ஐயா, ஒன்றும் பரவாயில்லை, இருந்து, நீங்கள் கேட்ட
சாப்பாட்டையே மகிழ்ந்து சாப்பிட்டு போகலாமே ...
என்றாரே பாப்போம்............ரேடியோவில் பாட்டின் கடைசி
வரி இப்போது " கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா..
கிருஷ்ணா.............. என்று முடிந்தது ............

" கிருஷ்ணா பவனில் க்ரிஷ்ணனா......"!!!!!!!!!!!!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Mar-18, 6:32 am)
பார்வை : 277

மேலே