வாழ்க்கைப் பாதை

தாயின் கருவறையில் பத்து
மாதம் தவமிருந்தேன்
தரணி எனும் தாயைப்
பார்க்க.......
தந்தையின் தோலில் தாவிக்
குதித்தேன் வானைத்
தொடும் ஆசையில்......
தோழனின் கரம் கோர்த்து
ஓடினேன் பள்ளி எனும்
நதியைக் கடக்க........
காதலி(லன்) கை கோர்த்தேன்
வாழ்க்கை எனும்
பாதையை கடக்க......
குழந்தையின் கரம் பிடித்தேன்
வர்ண ஜாலம் கொண்ட
மாய உலகை காண........
இறுதியில் எமதருமனின் பாசக்
கயிரைப் பற்றினேன்
மரணமெனும் மர்ம
உலகை காண.......