கேட்டேன்

ஒன்றைக் கேட்டேன் அதை பலவாக கேட்டேன் அதையும் ஒருவனிடம் கேட்டேன் அதில் தானே தோற்றேன்...

தாயின் அன்பு நீளக்கேட்டேன்...
தாகம் போல அடிக்கடி எனையனைக்க
கேட்டேன்...

அனைக்கும் தந்தை அரவனைப்பே
கேட்டேன் , நான் கீழே விழுந்தாலும்
அவர் மடியாகிருக்க கேட்டேன்...

தாய்மையின் நகலினை சகோதரியின்
வடிவில் கேட்டேன் , என்னிதம் அழும் நேரமெல்லாம் ஆறுதலாய் உடனிருக்க கேட்டேன்.

உடன்வளந்த தந்தைதான், உறுதுனையாய் எனக்குக்கையாக அண்னண் வடிவில்
உடன்முளைக்க கேட்டேன்.

மரத்தின் கிளைப்போல என்னோடு
என்றென்றும் உயிராக நட்பனவன்
நாள்தோரும் புன்னைகை்க்க கேட்டேன்.

உள்ளத்தில் ராணியாக , என்னுயிரில் பாதியாக மனைவியெனும் பெயராக மங்கையவள் சந்திரனாய் என்னோடு ஒளிரத்தான் கேட்டேன்...

எத்தனைத்தான் கேட்டாலும் அத்தனைக்கும் முடிவினிலே அவனோ !

நீயோ என்னோடு மேலானவனா எனக்கிடைக்காததையும் சேர்த்துக்கேட்கிறாய் என்றே சற்று முறைத்தான்...

அதில் தான் உணர்ந்தேன...

பாசம் என்பவன் மரணம் போல
அவன் என்றாவது ஓர்நாளே வருவான்...
இவன் என்றேனும் வந்து வந்தே சென்று உயிரோடு அவனைத்தருவான்...

- ✍🏻நெய்தல் தமிழன்
த. இருதயா

எழுதியவர் : த . இருதயா (12-Mar-18, 9:08 am)
Tanglish : KETTEN
பார்வை : 137

மேலே