உதிர்ந்த நட்சத்திரம்

பால்வெளி தாண்டி வந்த
நட்சத்திர தேவதைகள்
குமரி தாண்டி வந்த கடல்
காற்று பட்டு இதழ் விரிக்கும் பூக்கள்

பெருமை மட்டுமே பேசி
கொடுமைகள் மறந்து போனோம்...
விடிவெள்ளியை வீதியில் வைத்து
வெட்டி வீசி போய் கொண்டிருக்கிறோம்....

நாளைய எதிர்காலமே
வேண்டாம் என்று எட்டி
உதைத்த போய் கொண்டிருக்கிறோம்....

பெண்களுக்கு விழா எடுக்கும்
நாட்களில் நடந்து முடிந்ததை
மறந்து போய்கொண்டிருக்கிறோம்

காதல் என்ற பெயரால்
கொலை செய்யும் இவர்கள்
விலங்குகள்.....

உங்கள் பசிக்கு உதிர்ந்து விட்டதுஒரு நட்சத்திரம்....

இப்படியே போனால்
நட்சத்திரங்கள் உதிர்ந்த
வேற்று வனான்திரமே
மிச்சமிருக்கும்.....

எழுதியவர் : சந்தோஷ் (12-Mar-18, 7:00 am)
பார்வை : 175

மேலே