என் தோழியே
நீ கவலை கொள்ளும் போது என் மனம் உடைந்து போகுதே
இக்கல்லூரி வாழ்க்கை மீண்டும் கிடைக்குமோ
உனது கபடமில்லா அன்பு மீண்டும் கிடைக்குமோ
தெரியாது இத் தருணம் உனக்காக எதையும் செய்யும் துணிவு பிறந்தது
இது ஏன் என்று புரியவில்லை
உன்னோடு மீண்டும் கை கோர்த்து விளையாடும் தருணம் மீண்டும் கிடைக்குமோ
உன்னோடு சிறு சிறு சண்டைகள், கிண்டல்கள், சோகங்கள் , அழுகைகள்,
அரட்டைகள், மீண்டும் வருமோ நட்பே
ஆனால் கல்லூரியின் நினைவுகளையும் உனது அன்பினையும் மட்டும் தூக்கி செல்கிறேன்
எனக்கு விடை கொடு தோழியே ......
என் உடல் மட்டும் செல்கிறது
மனம் இங்கே விட்டு செல்கிறேன்
மீண்டும் எடுத்து செல்ல மாட்டேன்
ஏனென்றால் என் சுகம் இன்பம் எல்லாம் என் நட்பு எனும் உதிரம் தானே தோழியே ....
மீண்டும் சந்திபோம்
சுகமான சுமைகளுடன் .....
நட்பெனும் என் அன்பே