வலி

கடல் வெள்ளம் போல்
என் கனவுக்குள்
நுழைந்தவளே!

காந்தப் பார்வையால்
எனை முழுவதும்
ஈர்த்தவளே!

தவறு ஏதும்
செய்யவில்லையடி
நான்...
பிறகு ஏன்
தண்டனை தருகிறாய்!

துன்பத்திற்குள்
நான் துடிதுடிக்க
சிரிப்பை ஏனடி
வீசிச் செல்கிறாய்!

கல்லடிப்பட்ட
கள்ளிச்செடி போல்...
கண்ணீரை
சிந்திக்
கொண்டிருக்கிறேன்!

எழுதியவர் : நகுலன் (13-Mar-18, 10:45 am)
Tanglish : vali
பார்வை : 204

மேலே