தொல்காப்பியம்

தொல்காப்பியம்
சிறப்பு பாயிரம்
வட வேங்கடம் தென்குமரி
ஆ இடைத்
தமிழ் கூறும் நல் உலகத்து
வழக்கும் செய்யுளும் பொருளும் நாடிச்
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தோடு
முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத்தோனே போக்கறுபனுவல்
நிலம் தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நான் மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத்தெரிந்து
மயங்கா மரபின் எழுத்து முறை காட்டி
மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல் புகழ் நிறுத்த படிமையோனே !
_ பனம்பாரனர்

எழுதியவர் : கா.சூர்யா (13-Mar-18, 4:20 pm)
சேர்த்தது : Surya
பார்வை : 280

மேலே