தீயே இது உன் அறியாமையோ
வேண்டும்! வேண்டும்!
அநீதியை கொளுத்த
அதிகார போதையை எரிக்க
அறியாமையை அழித்திட
ஆசைகளை ஒழித்திட
தேவைக்கு அதிகமான செல்வங்களை கொளுத்திட
பெண்மைக்கு எதிரான ஆயுதங்களுக்கு தீயிட
சுயநலத்திற்காக இயற்கையை அழித்திடும்
........கொடுமையை கொளுத்திட
தீயே!
மிக பெரும் காட்டுத் தீயே!
நீ வேண்டும், வேண்டும்!
உந்தன் வேலை அதிகம் இருக்க
அசட்டுத்தனமாய் அப்பாவி மக்களை கொன்றுவிட்டாயே!
நீயும் என் மக்களை போல் தானா!
தீயே!
இது உன் அறியாமையோ!
-கலைப்பிரியை