தமிழோடு வாழ்வு

மார்ச் பதினைந்து...
அது.. ஆங்கில தேதி...

செந்தமிழோடு
உறவாடும் சாகுல்...
நாஞ்சில் தமிழோடு
உறவாடும் பொன்ஸ்...
பொதிகைத் தமிழோடு
உறவாடும் செல்வா...
ஆகியோருக்கு இன்று
பிறந்தநாள் என்பது
சிறப்புச் செய்தி...

நிறையபேர் தமிழை
வாசிக்க மட்டுமே செய்யும்போது
இவர்கள் தமிழை
சுவாசிப்பவர்கள்...

சாகுல் ஹமீது...
பல்வேறு தளங்களில்
விருத்தங்கள் புனைவான்...
கருத்தாடலில் சிலசமயம்
வருத்தங்கள் கொள்வான்...
எனினும் நட்பெனும்
ஒற்றை நூலில்
ஓராயிரம் நண்பர்களை
இவனது நட்பு மாலையில்
கோர்த்துக் கொள்வான்...
இவனது தினசரி
வாழ்த்துக்களில்
சக்தி ஒன்று இருக்கிறது...
அதில் வெற்றிக்கு நிறைய
யுக்தி இருக்கிறது...

பொன்னுசாமி...
பணத்தில் வலியவன்
என்பது காதுவழிச் செய்தி...
நற்குணத்தில் வலியவன்
பழகும் விதத்தில் எளியவன்
சிரிப்பழகில் வசீகரன்
என்பது கண்வழிச் செய்தி...
தலைமுடி கருமையாகும்
போதெல்லாம் இவன்
ஆயிரத்து தொள்ளாயிரத்து
எண்பதுகளின் தோற்றம்
கொள்கிறான்.. நண்பர்களின்
மனங்களை வெல்கிறான்...

செல்வகுமார்...
கரைகள் பல காண
கப்பல்கள் பயணிக்கும்...
கருத்துக் கடலில்
இவனது சிந்தனை
எப்போதும் பயணிக்கும்..
கப்பல்கள் அவ்வப்போது துறைமுகங்களில்
நங்கூரம் பாய்ச்சும்...
பயணிகள் ஏறி இறங்க..
செல்வா அவ்வப்போது
குழுவிற்கு வந்து செல்வான்...
அன்பான தகவல்களை
தந்து செல்வான்...

நண்பர்கள் மூவரும்
நம் குழுவிற்கு
மா பலா வாழை
அதனால் ஆனது குழு
ஒரு அன்புச் சோலை...
சாகுலிடம் அன்பும்
பொன்ஸிடம் அழகும்
செல்வாவிடம் ஆற்றலும்
அளவுக்கு அதிகம்...
உண்மை உழைப்பு உயர்வு
இம்மூன்றும் மூவரிடமும்
மிக மிக அதிகம்...

நண்பர்களே!
உயரம் இன்னும் இருக்கிறது
மற்றொரு ஐம்பது
ஆண்டுகளுக்கு
உயர்ந்து கொண்டே
இருப்பதற்கு...

மூவருக்கும் முத்தான
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
நீங்கள் பயணிக்கின்ற
பாதைகள் எல்லாம்
வசந்தங்கள் என்றென்றும்
வரமாகட்டும்.. வசமாகட்டும்...
👍🙋🏻‍♂🙏😀🌹🌹🌹

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (15-Mar-18, 3:25 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
Tanglish : thamilodu vaazvu
பார்வை : 199

மேலே