காதல் கடிதம் -------------
கண்ணீர் கசிந்த படி
நெஞ்சிலிருப்பதை வரையும் ஒரு மடல்
வாசம் வீசிய என் நந்தவனம்
உன் வருகை இல்லாததால்
வாசமின்றிப்போனது
பாசம் கலந்த உன் வார்த்தைகள்
இல்லாததால்
தேசம் கடந்து வாழ்வது போலானது என் வாழ்வு
நாம் நட்டிய பூந்தொட்டி உள்ள பூச்செடிகள்
உன் வருகைக்காகவே காத்திருக்கின்றது
நீ எப்போது வாருவாயோ
அப்போதே பூத்துக்குலுங்கும்
என்ற ஏக்கமான
பார்வைகளுடன்
உன் காதலன்...