​வசந்த அழைப்புகள்

​வசந்த அழைப்புகள்
-------------------------​--------

​​உச்சி முகர்ந்து
உற்சாகம் பொங்க
​உள்ளம் சிலிர்க்க
​உயிரணுக்கள் குளிர
​அன்பு வெள்ளம்
​அகத்தில் பெருகிட
​பாசத்தால் இதயம் ​
​பன்மடங்கு துடிக்க ​
​ஆசையுடன் அழைப்பாள் ​
​பெற்றுடுத்த அன்னை
மழலை செல்வத்தை ...​

​பருவம் படிதாண்ட ​
​உணர்வுகள் தூண்ட
​உள்ளம் பறிகொடுக்க ​
​காதல் ஊற்றெடுக்க ​
​காமம் துளிர்விட
கரைந்த இதயத்தால்
​​நெஞ்சம் படபடக்க
​பெருமூளை உறங்கிட ​
​சிறுமூளை மயங்கிட ​
​அன்புடன் அழைப்பாள் ​
​ஆருயிர் காதலியும் ​
​ஆர்வமாய் காதலனை ...​

​வசந்த அழைப்புகளே
வாழ்வில் இரண்டும்
​இன்பத்தின் ஒலியே
இவ்வுலகில் இரண்டும் ​
​மகிழ்ச்சிப் பெருக்கே ​
​மண்ணில் இரண்டும் ​
​மறுப்பார் யாருமில்லை ​
​வெறுப்பார் மனிதரில்லை !​

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Mar-18, 3:42 pm)
பார்வை : 128

மேலே