கனவாகிய தலபிரசவம்

என்
தவறு செய்தேன் ???
பிறக்கும்பிள்ளை அழுகுரல் கேளாமல் இறப்பை தழுவியதற்கு !!!
கருவறையில் சுமந்த என் உயிரை!
கலியுகம் ..
கல்லறையில் சுமக்கவிட்டது!!!!
தாராமாகி தாங்கவேண்டிய தலைவனை!
பாரமாகி விட்டுவிட்டண என் விதிதணை!!!
தாய் பால் அருந்தவேண்டிய என் மதி !
சாவு பால் ஊட்டவைத்தது என் விதி !!!
தலைக்கவசம் அணிந்திருந்தாள் !
தலைப்பிரசவம் காக்க பட்டிருக்குமோ!!!
என்பிள்ளை எட்டி உதைப்பான் என ஏங்கிய என்னவன்!
எம பிள்ளை எட்டி உதைத்ததில் உடைந்துவிட்டானோ!!
தலைக்காப்பு சூடப்பட்டிருந்தால்!
என்
வளைக்காப்பு போடப்பட்டிறருக்குமோ!!!
பிரசவத்தை எதிர்பார்த்தவன்!
இரு சவத்தை எதிர்நோக்கிறான்!!!
பிள்ளையை தூக்கவேண்டிய கைகளால் பிணத்தையல்லவா தூக்கவைத்தேன்!!!!
அப்பா வென்ற உறவை தராமல்!
அநாதைவென்று சிறையில் அடைத்துவிட்டேன்!!!
பிரசவம் மறுபிரவி என்றார்கள்!
மரறுபிரவியில்தான் என் பிரசவம் என்றறியாமல்!!!
காக்க வேண்டிய கைகள் !
தாக்கி விட்டன அதன் கால்கள்!!!!
இறுதி மூச்சில் ஒரு உறுதி கூறுகிறேன்!
சுயகாப்பு இல்லையெனில்
இச்சுயநலபூமியில் நீ இல்லை!!!!!
தலைக்கவசம் அவசியம்!!!!
~~~ ச வித்யா

எழுதியவர் : வித்யா ச (17-Mar-18, 12:06 am)
பார்வை : 68

மேலே