கனவுகள்

கனவுகள்
"""""""""""'""""""""""'
எப்பொழுதுமே கண்களை
வருடிசுருட்டி
ஆழ்ந்த நித்திரைக்குள்
வர்ணங்ளை உதறி
காட்சிகள்
கனவுகளுக்குள்
நகரத்தொடங்கும்!

கனவுக்குள் பயணிக்கும்
சோகங்களும்
சுகங்களும் விடிந்த பின்பு
எதுவுமே முழுவதுமாக
ஞாபகத்தில்
நிற்பதில்லை!

சிந்தனையை தூண்டி
ஞாபகங்களை கசக்கி
பிழிந்தாலும் '''மிகுதியாய்
இருப்பது வந்துபோன
மங்கலான தடயங்கள்
மாத்திரமே!

பார்த்து சிரித்து
பேசாமல் தவறிப்போன
மிச்சசொச்சங்களை
கனவில் பேசியிருப்போம்!

தேடி களைத்து
துலைந்துபோன நினைவுகளை
ஏதோ ஒருபாதைமுறிவில்
பார்ப்பதும்!

கேட்டுப் புளிச்சுப்போன
சம்பவங்களை அவளுக்காக
அவள் சொல்லும்போது
அலுக்காமல் கேட்பதும்!
கனவுகள் காதலில்
பயணிக்கு காலங்களில்
மாத்திமே!

எதிர்பார்த்து காத்திருப்பதும்,
தவறிப்போகும்போது
நேரம்கெட்டநேரத்தில்
சொல்லாமல் கொல்லாமல்
கதவை காலம்கடந்து தட்டுவதும்!
துரதிஸ்டமானவையே!

இந்த அற்ப சந்தோசங்கள்
நிரந்தரமாவதற்கான வாய்ப்பு
எப்போதும் இல்லை!

பரிட்சார்த்தமாக நடந்தவையெல்லாம்
நியமாக நடக்கவேண்டும்,
என்ற நிர்ப்பத்தங்களை மீறி
ஏதோ ஒரு வைகறை பொழுதில்
எலாம்மணியின் அலறளில்
கனவுகள் கலைந்து
ஒரு இயல்பு நிலைக்கு
மனசு விருப்பமில்லாமல்
வந்துசேர.
சில நாழிகையாகலாம்!!!

ஆக்கம் லவன்

எழுதியவர் : லவன் டென்மார்க் (17-Mar-18, 7:35 pm)
சேர்த்தது : லவன்
Tanglish : kanavugal
பார்வை : 219

மேலே