ஓடி வா

ஓடி வா
என் உள்ளத்தை
உன் காதலால் நிரப்பிட
ஓடி வா!

பாடி வா!
உன் ஆசையையெல்லாம்
வார்த்தைகளாய்
கோர்த்து காதல்
பாடலொன்றை
பாடி வா!

தேடி வா!
தேடல் உனக்கு
பிடிக்குமென்று
சொல்வாயே- நான்
ஒளிந்து கொண்டேன்
என் இதயம்
வேண்டுமா?நானிருக்கும்
இடத்தை
தேடி வா!

நாடி வா!
உன்னைக் காணாது
என் நாடித்துடிப்பு
அதிகரிக்கும் முன்னமே
நாடி வா!
ஓடி வா!
பாடி வா!
தேடி வா!
என் காதலை
உன்னிடம் சேர்த்திட!
வா காதலா!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (17-Mar-18, 7:31 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : oadi vaa
பார்வை : 158

மேலே