பார்தேன் தேவதை
வெள்ளை நிற வெய்யிலில்,
கொள்ளை கொள்ளும் அழகே!
எல்லை இல்லா காதல்,
தொல்லை செய்யுது என்னை...
புன்னகை மறைக்கும் விரல்கள்,
புவி மயக்கும் விழிகள்...
என் நிழல் என்னை தொடாமல் போக,
விடாமல் பறந்தேன் கண் மூடி நானே!!!
வண்ணம் பூசா செவ்வுதடு
வருடிட சிவக்கும் வெண்தாமரை...
என் இமைகள் ரெண்டும் தொடாமல் போக,
விடாமல் பார்தேன் கண் மூடா நானே!!!
--வெள்ளை நிற...