யாதுமாகி நின்றாள்

அன்னையாக உந்தன்
அன்பை ஏற்கிறோம்
தங்கையாக உந்தன்
பாசத்தில் பங்கேற்கிறோம்
மருத்துவத்தில் உந்தன்
மகிமையை காண்கிறோம்
இராணுவத்தில் உந்தன்
வீரத்தை தலைவணங்குகிறோம்
மனைவியாக உன்னை
மனதார நேசிக்கிறோம்
இல்லறத்தில் உந்தன்
இம்சைகளை தாங்குகிறோம்
சிறைக்குள் அடைபடாதவண்டாக
சிறகடித்து பறந்துவிடு
துணிச்சல் கொண்டமங்கையாக
துள்ளித்திரிந்து நடமாடு
ஆகாயத்தில் ஆட்சிசெய்யும்மேகமாக
ஆட்சிசெய்யவேண்டும் இப்புவியில்
மங்காத ஒளிவிளக்காகநீயும்
மறைவின்றி ஒளிகொடுப்பாய்குடிசையில்
குலதெய்வமும் நீதான்
குலமகளும் நீதான்
குலவிளக்கும் நீதான்
குருவும் நீதான்
மனித குலத்தில்
அன்னையாகும் பாக்கியமும்
அண்ணமிடும் கருணையும்உண்டு
காற்றின்றி சுவாசமில்லை
கானிநிலமின்றி இருப்பிடமில்லை
பிறப்போ இறப்போ
மங்கைநீயின்றி எதுவுமில்லை !...