சகியின் பிரிவு

நினைவும் நீயும் மறக்க பழக வேண்டின்
என் உடலும் உயிரும் உறக்கம் கேட்க
சகியே உறக்கத்திலும் என் உயிர் காயம் பட
உன் நினைவுகள் அனைத்தும் கனவுகளாய் தோன்ற
என் உயிர் பிரிகின்றனவே
நீ செல்லும் வேளையில் என் உயிரையும் எடுத்து சென்றிருந்தால்
உயிர் போகும் சோகம் தாக்காமல் இருந்துருப்பேனே உயிரே

எழுதியவர் : குமரன் (19-Mar-18, 9:01 pm)
Tanglish : sakiyin pirivu
பார்வை : 110

மேலே