அவளும் அழகும்
அவளின் துப்பட்டா
காற்றில் மிதந்து
என் முகத்தின் மீது மோதும்
அந்த நொடிகளில்
ஒரு பூங்காற்றின்
ஸ்பரிசத்தை
உணர்கிறது என் இதயம்...
காற்று மோதி
அலையும் அவளது கூந்தல்
ஒவ்வொரு முறையும்
அவளின் நெற்றியிலும் கன்னத்திலும்
நவீன ஓவியம் வரைகிறது
கைகள் அதை மீண்டும்
கலைக்கிறது...