தனிமையோடு பேசுங்கள்

உணர்ந்தும் உணராத ,புரிந்தும் புரியதா,
நம் நினைவுகளின் தொகுப்பில் உள்ள
பல வினாக்களுக்கு விடை தேடி நமக்குள்
நாமே செல்லும் பயணம்தான் தனிமை,

பயணம் பிறரின் தூண்டுதலின்றி வந்தால்
கொஞ்சம் இனிமையும் கசப்பும் கலந்திருக்கும்,
எவ்வித பிறர்தூண்டுதலின்றி சுயமாக வந்தால்
வாழ்வில் இனிமையே மட்டுமே தந்திருக்கும்,

தனிமை என்பது ஆன்மாவின் உரையாடல்,
அது கடவுளின் மொழி கற்றுக்கொள்ளுங்கள்
வாழ்வில் நலம் பெற தனிமையோடு பேசுங்கள் ……

எழுதியவர் : புதுகை செநா (20-Mar-18, 10:33 pm)
பார்வை : 2381

மேலே