கேரளா மது மரணம்
கல்வியில் சிறந்த மாநிலமென்று
கத்தி கத்தி சொல்லியவன்
புத்தியின்றி செய்த செயல்
புத்தகத்தில் படித்ததோ..!
மடிந்து போன மனிதத்தோடு
மனித உருவில் அலைபவன்...
மனநலம் பாதித்தவன் நானென்று
மனமே இல்லாமல் சொல்கின்றான்..!
பணத்தின் மீது பசிகொண்டு
பதுக்கி வைக்கும் உலகத்தில்...
உணவே எடுத்தது தவறென்று
உயிரே பிரித்து கொல்கின்றான்..!
இறந்தது நானல்ல
இரக்கமென்ற குணங்கள்தான்..!
இருக்கின்ற நீங்களெல்லாம்
இதயம் துடிக்கும் பிணங்கள்தான்..!
பிரிந்தது உயிரல்ல
பிழையான வாழ்வுதான்..!
பிறரின் பசி வலியை
புரிய வைக்கும் சாவுதான்..!
இனிவரும் காலத்திலாவது
இல்லாதவனுக்கு உணவிடுங்கள்..!
மறைந்து போன என்னுயிரால்
மலரட்டும் மனிதநேயம்..!
மறைந்து போன என்னுயிரால்
மலரட்டும் மனிதநேயம்..!!!