நடப்போம் அறவழி நாம்

கொடுமையும் துன்பமும் காண்போ மெனினும்
நடப்போ மறவழி நாம்

தடமதில் முற்கள் தடைபோ லெனினும்
நடப்போ மறவழி நாம்

கடனதில் சிக்கும் கழுத்து எனினும்
நடப்போ மறவழி நாம்

கடவுளைக் கண்களால் காணோ மெனினும்
நடப்போ மறவழி நாம்

அடங்காத ஆசைகள் ஆடு மெனினும்
நடப்போ மறவழி நாம்

தொடராய்த் தொடர்ந்திடும் தோல்வி எனினும்
நடப்போ மறவழி நாம்

உடன்பிறப் பேதான் உதறிய போதும்
நடப்போ மறவழி நாம்

முடமாய் பிறந்தும் முணங்கா மனதால்
நடப்போ மறவழி நாம்

விடம்போல் கொல்லும் வறுமை எனினும்
நடப்போ மறவழி நாம்

நடந்திடும் நல்லவை நாளை என்றே
நடப்போ மறவழி நாம்

- குறட்பாக்கள்
சுரேஷ் ஸ்ரீனிவாசன்

எழுதியவர் : சுரேஷ் ஸ்ரீனிவாசன் (22-Mar-18, 7:43 pm)
பார்வை : 67

மேலே