கலங்காதே தோழி

குழந்தை முதல்
இன்று வரை
உன்
மகிழ்ச்சி
எல்லாம்
ஏழை வீட்டு
சோற்று
பானையாய்
காலியாகியே
கிடக்கிறது...

குடும்ப
சிலுவையே
சுமக்கிறாய்
வாழ்க்கை
உனக்கு
முள் கிரீடம்
சூட்டி
மகிழ்கிறது...

உன்
கனவுகளை
கூட
இன்னும்
கருப்பு
வெள்ளையில்
வைத்திருக்கிறது
காலம்....

உன்
வாழ்வுக்கும்
இயந்திர
வாழ்வுக்கும்
ஒரு
வித்தியசம்..?
நீ....
சுவாசிக்கிறாய்...

எப்போதாவது
உன்னில்
விழுகிறது
சிறு துளியாய்
இன்பம்..
அதையும்
வரண்டபூமியாய்
உடனே
உறிஞ்சி
விடுகிறது
காலம்.....

உனக்கு விழி
இருப்பதே
வலி.நீர் சுரக்கதானா?

காலம் தின்றுவிட்ட
உன் வாழ்வில்
மிச்சமிருப்பது
உயிரும்
வலிகளும்தான்

வலியோடு நீ
அழும் போது
முகம் புதைக்க
தோளுமில்லை
தலை கோத
விரலுமில்லை...

உன்
உணர்வு
அறிந்தவர்
யாருமில்லை

ஒருவேளை
உன்
நிழலுக்கு
வேண்டுமானால்
தெரிந்திருக்கலாம்
உன்னை பற்றி...

கலங்காதே தோழி...

எழுதியவர் : (22-Mar-18, 8:03 pm)
Tanglish : kalangkaathE thozhi
பார்வை : 488

மேலே