மன்னிப்பாயா

என் விளையாட்டால் உன்னை தோற்கவைத்து விட்டேன்
உன்னை சந்திக்க தைரியம் இல்லை என் கண்களுக்கு
என்னால் சுமையான உன் மனத்திடமும்,
சோர்வான உன் முகத்திடமும்
எப்படி சொல்வேன் என் நிலையை ?
என்னால் உன் மீது பிறர் எழுப்பும் கேள்விகளுக்கு நடுவில் சிக்கித்தவிக்கிறேன்
மன்னிப்பு கேட்க தைரியம் இல்லாமல் !
இத்தனை சலனங்களையும் தாண்டி
என்னை வியக்க வைக்கிறது "உன் காதல் "
நான் காதலை கொடுத்தால் நீ அதிக காதலை கொடுக்கிறாய்....
நான் காயத்தை கொடுத்தால் நீ மிக மிக அதிக காதலை கொடுக்கிறாய்....
உன்னை எண்ணி வியக்க வியக்க வெறுக்க தொடங்குகிறேன் என்னை
நான் செய்யும் தவறுகளுக்கு தண்டனையாக கூட காதலை தருகிறாயே
காதலித்து கொல்கிறாய்,என்னை காதலால் கொல்கிறாயடா!

எழுதியவர் : அணு (23-Mar-18, 11:44 am)
சேர்த்தது : anu
Tanglish : mannippaayaa
பார்வை : 150

மேலே