நினைவலைகள்

நினைவலைகள்
""""""""""''""""""'''""""'''"""''''''
எப்போதுமே ஒன்றும்
நடக்காதமாதிரி பேசி,
முகம்முழுக்க
புன்னகையை பூசி ,
குறும்பில் பொட்டுவைத்திருக்கும்
உன்னை நினைத்தால்
பிரமிப்பாயிருக்கு!

ஒளிவு மறைவில்லாமல்
கொட்டிச்சிந்திவிட்டு
பிடிக்காதவற்றில்
மொனமாகிவிடுவாய்!

அகோர பசியுடன்
நாள்பட்டகேள்விகளுக்கு
பதில்தேடும்போது ,
கடந்துபோன
இனிய நினைவுகளை
தேர்தெடுத்து,
அதில் கரைந்து ,கண்ணீர்சிந்தி,
என்னையும்
கரைத்திடுவாய்!

நடந்து முடிந்த நாட்களில்
பிடிகொடுக்காமல் பேசி,
வெட்கத்தை உதறிவிட்டு,அதில்
விழுந்த துளிகளில்
தூவானமாகி,என்னை
நனைத்திருப்பாய்.!

உதட்டைகடித்து
அன்றைய எனது பொழுதின் நினைவுகளில் குந்தியிருப்பாய்!

இப்பவெல்லாம் காலம்கடந்து
அதிகம்பேசுகிறோம்!
நூலிலையில் தவறிப்போன உறவைப்பற்றிய பெருமூச்சுக்கள்""
எனக்குள் வந்து போவது
தவிர்க்க முடியாமல் உள்ளது!!!

லவன் டென்மார்க்

எழுதியவர் : லவன் டென்மார்க் (23-Mar-18, 11:56 am)
சேர்த்தது : லவன்
பார்வை : 113

மேலே