அந்த அவள்
அழகின் மொத்த உருவாய்
அவளைப் படைத்த இறைவன்
அவளைப் பேசா மடந்தை
ஆக்கியது ஏனோ- பேசாதவள்
மட்டும் என்றெண்ணி நான்
என்னருகே வருமாறு அழைத்தேன்
அப்போது தெரிந்தது அதுவும்
அழகிய காதுகள் இருந்தும்
கேட்க முடியாதவள் - ஐயகோ
என்ன கொடுமை என்றெண்ணினேன்
என் கண்களில் நீர் பெறுக
அதை கண்டா அவள் ,
என்னருகே வந்தால் , என் கண்களை
துடைத்தாள், தன மொழியில்
-சைகை மொழியில் கூறினாள்
'கலங்க வேண்டாம், எனக்காக
இறங்க வேண்டாம் நட்பே,
' தீயவை கேட்கவேண்டாம் என்று
செவிகளை அடைத்துவிட்டான்,
தீயவைப் பேசுதல் கூடாதென்று
பேச்சு தரவில்லை- ஆனால்
இறைவனுக்கு என் நன்றிகள்
ஆயிரம், ஆயிரம் எனக்கு
காண கண்கள் தந்தானே '
அதைக் கொண்டு நண்பா
உன்னை கண்டுகொள்ள
ஒரு நல்ல நண்பனை அளித்தானே
அதில் இன்பம் அத்தனையும்
நான் காண்கின்றேன் என்றாள்
என் கண்களில் என்னை அறியாது
கணீர் ஆராய்ப் பெருகியது .......
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
