முடியாத ஆசைகள்
பாக்கள் எழுத ஆசை தான்.....எழுத்தில் சொல்ல தெரியலை தான்
அறிவுரை சொல்ல ஆசை தான் .......அகவை ரொம்ப ஆகலை தான்
ஊருக்கு வாழ ஆசை தான்....... உண்மை சொல்ல துணிவில்லை தான்
சுத்தமாய் வச்சுக்க ஆசைதான்.....சோம்பல் தவிர்க்க முடியலை தான்.....
கொஞ்சி மகிழ ஆசைதான்.......கோபம் விடுக்க இயலலை தான்
விரதம் இருக்க ஆசை தான்........உணவை மறுக்க முடியலை தான்
ஆசைகள் துறக்க ஆசை தான்.....ஆண்டவன் அருள வேண்டும் தான்.....