ஒரு பக்க கதைகள்

விடியல் முன் அதிகாலையில் சூரியன் எழும் நிலை பறவைகள் கூச்சலிட்டு டி பறந்து கொண்டு இருந்தது.பரிட்சை நேரம் ராமு எழுந்து படிடா.... நேரம் ஆச்சு!!படிச்சா தானே மதிப்பெண் உயரும்.வகுப்பறையில் முதலாவது வர முடியும்.எழுந்து படியா.... என் அம்மா குரல் கேட்க, கனவுலகில் மெடல் வாங்குற நேரத்துல குரல் கேட்டது.அவனோ அடிச்சு பிடிச்சு எழுந்தா!! எல்லாமே கனவு அம்மா
ஏம்மா? இப்படி பண்ணீங்க. என்னடா ஆச்சு என்ன சொல்லுற ? அம்மா கனவுலகில் மெடல் வாங்கும் போது இப்படி எழுப்பிட்டீங்களே!! உடனே
அம்மா சொன்னாங்க கனவு காணலாம் தவறு இல்லை.ஆனா அதற்கான முயற்சி வேண்டும்டா. அப்பதான் முன்னேற முடியும்.வாழ்க்கையில் சில விஷயங்களை தெரிஞ்சுகோ.
முயற்சி வேண்டும், கடுமையான உழைப்பு வேண்டும், அது மட்டுமல்ல தோல்வி வந்தா கூட பயம் இல்லாமல் உறுதி வேண்டும்.முன்னேற முன்னேற தான் வாழ்க்கையில வெற்றி வரும்.. புரியுதா ராமு.முதலாவதாக படி படி கடுமையான ! நேர்மையான!! அதற்கு தகுந்த முயற்சியை எடு.பின் நீ மட்டுமே மெடல் வாங்குவாய்அனைவரின் கை தட்டல் உடன் . அம்மாவின் அறிவுரையை ஏற்று ராமு படிக்க தொடங்கினான்.
"பெற்றோர்கள் பெரியவர்கள் சொல்லும் வார்த்தைகள் நம் நன்மைக்கே"

எழுதியவர் : உமா மணி படைப்பு (23-Mar-18, 12:40 pm)
சேர்த்தது : உமா
Tanglish : oru pakka kadhaigal
பார்வை : 167

மேலே