வாய்மையே வெல்லும்

உண்மையே பேசு
என்று எப்பொழுதும் வாதிடும்
தந்தையால் வளர்க்கப்பட்டேன்!!!

தவறு நடந்திருக்கிறது
அதைப் பார்த்து
மனது சும்மா இருக்கமுடியவில்லை!!!

போலீஸிடம்
உண்மையைச் சொன்னேன்
அதுவே எனக்கு வினையாகி
என் மேல் பொய்ப்பழி
இன்று நான் சிறையில்!!!

சிறையதிகாரியின்
தலைக்கு மேல்
வாய்மையே வெல்லும்
பிரேம் போட்டு!!!

அடப்பாவிங்களா
அதையும் சிறைவைத்திட்டங்களே!!!

எழுதியவர் : (23-Mar-18, 2:13 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
Tanglish : vaimaye vellum
பார்வை : 2167

மேலே