உறங்கி கொண்டே இரு
வெளியே வருவதற்கு
வெளிச்சம் பார்ப்பதற்கு
திங்கள் பத்து இருக்க
திங்கலாய் நீ பிறக்க
முகிலாய் நான் தாங்க
முத்தாய் நீ சிரிக்க
தேனாய் எச்சில் வடிய
என் கரத்தால் துடைக்க
சாதனைகள் பல செய்து
சாதித்து நீ காட்ட
நாட்கள் பல இருக்கு
அதுவரையில்,
அமைதியாக இரு
உறங்கிக்கொண்டே இரு
தாய் சொல்லை தட்டாதே
என் வயிற்றில் வளரும்
பிஞ்சு பிரபஞ்சமே.........