அம்மாவுக்கு ஒரு கவிதை

அம்மாவுக்கு ஒரு கவிதை:

எங்கெல்லாமோ சுற்றி திரிந்தேன்
உண்மையான அன்பிற்கு
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இறுதியில் தான்
அறிந்து கொண்டேன்..
அன்பு என்ற ஒன்று பிறப்பதே
அன்னையிடமிருந்து தான் என்று..!

உலகில் அனைவருமே
கவிஞர்கள் தான்
ஏனென்றால்,
நாம் பிறந்த பிறகு பேசும்
முதல் கவிதை "#அம்மா"..

அன்பை தன்வசம் அடிமையாக்கி
அழகாய் ஆழும் ராணி அவள்..
பாசத்தின் மறுஉருவமவள்..
கோபத்திற்கு அர்த்தம்
தெரியாதவள்..

முதல் முத்தம் பதித்தவள்
கலப்பிடமில்லாத காதல் அவள்

அன்று நடைபழகி
விழும் போது தாங்கியவள்
இன்றும் விழும் போதும்
தன் கரங்களால் தாங்கி கொண்டு
தான் இருக்கின்றாள்..

தன்னம்பிக்கையின் அடையாளம்
அவள்..
அறிவுரைகளின் அஸ்திவாரம்
அவள்..
ஆனந்தத்தின் அடையாளம் அவள்..

இறைவன் படைத்த முதல் கவிதை
"#அம்மா"..
இந்த உலகம் சொல்லும்
முதல் கவிதை "#அம்மா"..
இந்த உலகம் கேட்ட முதல் கவிதை
"#அம்மா"..
இந்த உலகம் ரசித்த முதல் கவிதை
"#அம்மா"..
இந்த உலகிற்கே முதல் கவிதை
"#அம்மா"..
பொய்கள் கலக்காத கவிதையும்
"#அம்மா"..

உன்னால் தான் உயிரெழுத்துக்கு
உயிர் வந்ததனவோ 'அ'ம்மா..

இருட்டில் கிடக்கும் நம் வாழ்விற்க்கு
வெளிச்சம் காட்டியவள் "#அம்மா"..

தன்னை பற்றிய நினைவை மறந்து
நம்மை பற்றியே நினைத்து வாழும்
ஓர் உயிர் "#அம்மா"..

முழுமையாக வர்ணிக்க
இன்னும் வார்த்தைகள் கிடைக்காத
கவிதை "#அம்மா"

இறைவனுக்கு கோடான கோடி
நன்றி செலுத்துங்கள் இப்படியொரு
உன்னதமான உறவை படைத்து
நம்மை அரவணைத்ததிற்காக..

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு
நான் வடித்த முதல் கவிதை இது..

தாயை நேசிக்கும் அனைவருக்கும்
என் கவிதை ஒரு சமர்ப்பணம்...!

😍"#அம்மா"😍

கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (23-Mar-18, 8:30 pm)
பார்வை : 1835

மேலே