கடவுள் ஒருவரே மனிதனும் ஒருவனே

கடவுள் ஒருவரே மனிதனும் ஒருவனே


கடவுள் ஒருவரே ‌‌‌‌‌என்ற சிறுகதை எனது தனிப்பட்ட கருத்து.இது யார் மனதையும் புண்படுத்தினாலும்,மதத்தை இழிவு படுத்தி இருந்தாலும் கடவுளே காரணம்.கடவுள் தான் என்னை எழுத செய்தார்.


கடவுள் பல பெயர்களால் பல மாதங்களாக பிரித்து வைத்து இருப்பது தனிபட்ட சில மனிதன் .அது அவனது அரசியல் மற்றும் அதிகார வாழ்க்கைக்கு அனைத்து மனிதனை முட்டாளாக்கி பிரித்து வைத்திருக்கிறான்.

இந்து மதத்தின் கடவுள் , இந்து மதம் அவர்களின் கூற்றுப்படி கடவுள் பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.
விரல் விட்டு எண்ண முடியாத கடவுள் உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவில் பிறந்த கடவுள்.
கடவுள் என்றால் உலகையே ஆள்பவன் என்று அர்த்தம்

ஏன் இராமன், கிருஷ்ணன்.... அவதாரம் போல அதே கடவுள் வெளிநாடுகளில் இயேசுவாக , , , முஸ்லிம் மத இறைவன் நம்பிக்கை அவதாரம் எடுத்து இருக்கலாம் அல்லவா. இது இந்தியாவின் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.ஆக நமது இந்து கடவுள் தான் இயேசு அவதாரம் ,முஸ்லிம் கடவுள் நம்பிக்கை அவதாரம் ஒன்று தான். அதனால் இயேசு ,அல்லா வணங்குவோம்.

இந்து மதத்தின் வரலாறு மற்றும் உருவான விதத்தை இந்து என்ற அடையாளம் உடைய தமிழன் அறிந்து கொள்ளுங்கள்.

அறிந்தால் தெரியும் தமிழன் மதம் அற்றவன் இயற்க்கையையும், தனது முன்னேர்களை கடவுளாக வழிபடும் வழக்கம் உடையவர்.குல தெய்வம் வழிபாடு உடையவனிடம் மதம் திணிக்கபட்டது என்று

மதத்தின் மூலம் தொழிலை வைத்தும் கடவுளை கொண்டு சாதி அடையாளம் உருவாக்கப்பட்டது.

சாதியை உருவாக்கிய சுயநலமுடையவன் உழைக்காதவன் உயர்ந்தவனாம்,
தனக்கும் மற்றவருக்கும் உழைத்தவர் தாழ்ந்தவன்.

இன்று சாதி, மதம், இனம், வைத்து அரசியல் நடத்துவோர் இவற்றை அழிய விடாமலும் நம்மை ஒன்று சேர விடாமல் வைத்து பணம் பார்கின்றனர்.

அன்று அறிவில்லாமல் ஏற்று கொண்டோம்.
இன்று யோசித்து நல்ல முடிவு எடு...


மதத்தை மறந்து சாதியை துறந்து
இனத்தை கடந்து மனிதனாய் மாறுவோம்..



Write
by
T.Suresh.

எழுதியவர் : சுரேஷ் (23-Mar-18, 7:32 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 399

மேலே