காதல் சொல்ல வார்த்தை இல்லை
என் நிலை அறிந்து
என் பசி உண்ணாவிரதம் இருக்கிறது
உன்னைக் காணும் வரை
என் தூக்கம் மாத்திரை உண்டு
கண்மூடாது விழித்திருக்கின்றது
நீ என்னிடம் சேரும் வரை,
முதல் பார்வையிலே என் நெஞ்சில்
முத்திரை பதித்தாய்
உன்னழகை சொல்ல நான் பேனா எடுத்தால்
என் வரிகளுக்குள் அறவே சிக்காமல்
என்னைப் புறந் தள்ளிவிட்டு அகன்று நின்று
என்னை ஏளனமாய்ப் பார்க்கிறது உன்னழகு
முயன்று முயன்று தோற்று உன்னைப் போன்று
மூச்சு முட்டி நிற்கின்றது என் கவிதை
எவ்வாறு தான் உன்னிடம் என் காதலை சொல்வது ?
ஆக்கம்
அஷ்ரப் அலி

