இருட்டை விலக்கு
வெண்மை அணி மனதிற்கு
உண்மை அணி உதட்டிற்கு
இருட்டுச் சிந்தனை விலக்கு
வெளிச்ச எண்ணமே விளக்கு
நேர்மையை நெஞ்சம் வை
தெளிவான இலக்கு வை
பிழை என்று தெரிந்த பின்னும்
நிழல் போல தொடர்தல் தீது
குழி என்று அறிந்த போதும்
குதிப்பேன் எனில் லாபம் ஏது
வழிகாட்டும் தீபம் இங்கே
ஆயிரங்கள் இருக்கும் போது
விழிக்காமல் இருட்டில் நானும்
இருப்பேன் என்பது ஆகாது
துணிந்த பின் துக்கம் ஏது
தூக்கம் ஒரு மயக்கும் மது
எழுந்து வா எந்தன் நண்பா
உலகமே உந்தன் பின் தான்