அவன் தந்த முத்தங்கள்

பசும்பொன் கன்னங்கள்
அதில் அவன் புதைத்த
ஆசை முத்தங்கள்
அத்தனையும் அங்கும்
இங்கும் கன்னத்தில்
பதித்த சிறு பவளத்தீவுகளோ
என் முகத்தை நிலைக்கண்ணாடி
காட்ட, வெட்கத்தால் என் முகம் வியர்க்க,
பவளத்தீவு சுற்றி நீர்த்திவலைகள் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Mar-18, 3:44 pm)
பார்வை : 107

மேலே