நீயே பறித்து கொண்டாய்...

உன்னோடு வாழ்ந்த நிமிடம் போதுமன்பே...
உயிரோடு சாகும் தருணம் போதுமன்பே...
உன்னை நினைக்கவே..
உள்ளம் துடிக்குதே...!
உடலைப் பிரியவே..
உயிரும் நினைக்குதே...!

உன்தன் உருவம் காணும்பொழுதிலே
உள்ளம் பறிபோகுதே...!
உன்தன் குரல்
கேட்கும் நொடியிலே
வலிகள் சுகங்கள் ஆகுதே...!

கண்கள் மூடி திறக்கும்போது
கண்ணெதிரே வந்தாய்...
காதல் என்ற கடிதம் ஒன்றை
கண்களாலே தந்தாய்...

உதிர்ந்துபோன இதய மலரினை
ஒன்று சேர்த்து தந்தாய்...
தந்த இதயம் உனக்கு என்று
நீயே பறித்துக் கொண்டாய்...!!!

எழுதியவர் : மணிசோமனா ஜெயமுருகன் (24-Mar-18, 3:18 pm)
பார்வை : 59

மேலே