புரிதல்
![](https://eluthu.com/images/loading.gif)
நிலை இல்லா இவ்வுலகில்
உனைச் சூழும்
தனிமையும் நிலை இல்லாதது
ஆதாலால் எண்ணம்
தனில் துணிவுக் கொள்
நிஜமெது நிழலெது
என மதிப்பீடக் கற்றுக்
கொள் நன்மை எது
தீமை எதுவென திறனறிய
கற்றுக் கொள் சூதும்
உனைச் சூழும் போதுக்
கற்றதுக் கை கொடுக்கும்
வாழும் வரை உனை
விழாதுக் காக்கும் வெற்றி
வித்திடும் வாழ்த்து வானெட்டும்...!