விதைத்தவனின் விசும்பல்
காத்திருந்தேன் கனவுகளோடு
பெருமை கொண்டேன்
வாழ்வளிக்கும் வயோதிகன்-நானென்று…
ஆனால் போராடுவதே
என் தொடர்கதையானது.
வானம் பார்த்து காத்திருந்தேன் -அன்று
வானுயர கட்டிடமே தெரிகிறது-இன்று
விளைநிலம் விலைநிலமாகிய போதும்…
கடப்பாறை கையில் பிடித்த போதும்…
கலப்பை பிடித்த நினைவுகள்-நெஞ்சினில்.
விளைநிலம் வீட்டுக்கட்டிடமான போது
விவசாயமும் அழிந்து போனது…
முல்லைப் பெரியாறாய் முட்டுக் கட்டையிட்டும்…
காவிரியாய் வந்து கைவிட்டும் விட்டாயே…
விதையை விளைவிக்க முடியாமல்
வெடித்து நிற்கின்றது-என் நிலம்
எங்களின் தற்கொலையை கூட
விபத்தாய் பார்க்கின்றனர்-பலரும்.
படத்திற்கு கிடைக்கும் முக்கியத்துவம்
என் விவசாயத்திற்கு கிடைக்கவில்லை-என
நினைக்கும் போது தற்கொலையே
சரியானதாகிவிடுகிறது...
விவசாயியாய் பிறந்ததுதான் என் தவறோ?
***விவசாயம் அழிகிறதெனில் விவசாயியும் அழிகிறான்***