காதல்
காதல் எனை கவிஞன்
ஆக்கியது என் கிறுக்கள்
யாவும் கவிதை ஆக்கியது
நானதை காகித வானில்
வால் பட்டமாக்கி பறக்கவிட
தலைக் கால் புரியாமல்
சுழன்றும் உயர உயர
பறந்தது காரணம் அவள்
கவனம் ஈர்த்து பார்ப்பால்
ரசிப்பால் வாசிப்பால் என்
காதலை உணர்வால் என்று
என்னாசை நூல் தொடுத்த
பட்டம் ஆக்கிவிட்டேன்....!

