விட்டு விட்டேன்

விற்காத வேண்டாத காய்கறியை
வீட்டில் கொண்டு சமைப்பாயா ??
வினவினேன் காய்காரியிடம்....

" வேண்டுமளவு உணவகங்கள்
வீதியெங்கும் உள்ளனவே...
வீட்டிலே சமைப்பானேன்...
வீணாப் போனதை " என்றாள்,

விட்டு விட்டேன்... அன்றிலிருந்து
வீதிக்கடை விருந்தை.

🌸இன்னிலா🌸

எழுதியவர் : இன்னிலா (27-Mar-18, 3:20 pm)
Tanglish : vittu vitten
பார்வை : 202

மேலே