எங்கோ ஒரு மின்னல்

தூரத்தில் நீ வாழ்ந்த போதும் - என்
துயர் மூச்சு உன் மீது அனலாக மோதும்
நேரத்தில் உறங்காத மோகம் - உன்
நினைவோடு தள்ளாடும் சிவப்பாகும் மேகம்
காலத்தில் தழுவாத தென்றல் - என்
கனல் மூச்சைத் துடுப்பாக்கிக்கரை தேடும் காதல்
ஞாலத்தில் இதுவென்ன வாழ்க்கை - நான் நனைகிறேன் காய்கிறேன் உனக்கு
வேடிக்கை

எழுதியவர் : வீரவாணன் (28-Mar-18, 8:05 am)
சேர்த்தது : வீரவாணன்
Tanglish : yengo oru minnal
பார்வை : 95

மேலே