கைபேசி
சிந்தை செய்ய நேரமில்லை
இயற்கை யழகு விந்தைக் காண விழிகளில்லை!
சிந்தை ஊன்றி எழுதிடும் துலாக்கோலும்
யென் விரல்களில் இல்லை!
எங்கு தொலைத்தேன் தேடும் வினாவில்
கிட்டிய விடையோ அலைபேசியின் ஒளித்திரை செயலிகளில்!
தேடல் யேதுமாயினும் கால்களோ டவில்லை
ஏந்தி நின்ற கரங்களிலே வீழ்ந்துவிட்ட தேடல்!
துருதுரு வென்றியங்கும் தேகமும்
மதமத வென ஆமை வேகமானதே!
கையடக்கத்தில் உலகறிவு யிருந்திடினும்
வாசிக்கும் ஆவலில்லை புத்தகம் போல்!
செல்பியில் துறந்த உயிரோ
செல்லிடையில் தொலைந்த வாழ்வோ!
இணைய பயன்பாட்டில் கழிந்த நேரமோ
ஏராளம்!
செல்லிடையில் விரலிடை போடும் தாளம்
நேர விரயங்களில் மதிமயங்கும் கீதம்!
எங்குநோக்கினும் மாந்தர்கள் விழிநோக்கியே
அலைபேசியின் ஒளித்திரை!
பூவுலகை மெல்லக் கொள்ள
குவியுதே குப்பையாய்!
நீ யில்லாவொரு நாள் பிறக்குமோ
ஏங்கியே நிற்கும் மனம்!