தேடல்

தேடுகிறேன்... தேடுகிறேன்...

கண்களில் கருவிழிகளாய்,
இதயத்தில் இதயத் துடிப்பாய்,
உடலில் நரம்புகளாய்,இரத்த துளிகளாய்,
உயிரோடு உயிர் கலந்தவளாய்,
மூளையில் நினைவுகளாய் என அனைத்திலும்
கலந்த என்னவளோடு ஒன்றிணைவதற்கு
தூதாய் இருந்த கோர்த்த
பத்து தொலைபேசி எண்களை
தொலைத்தனோ...

சிதைந்தது கோர்வை மட்டுமல்ல...
முகப்பொலிவு,மகிழ்ச்சி ,
அறுசுவைகள், புத்துணர்ச்சி,
வீரம், வலிமை,பார்வை, கேட்டல்,
முகர்தல், சுயநினைவுகள் சிதைந்து போனதே....
எண்களின் கோர்வையைத்
தேடுகிறேன்.... தேடுகிறேன்...

இறைவனும் லஞ்சம் வாங்குவார் என்று தெரிந்தால்
எனது மனமும் தன் உயிரை லஞ்சமாய் கொடுத்து
என்னவள் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வைப்பாய்
என்று வரம் கேட்க இறைவனை
தேடுகிறேன்.... தேடுகிறேன்.....

இதுவரை தெரியவில்லை சுவாசிப்பது உன் சுவாசக் காற்று என்று....
தெரிந்த பின்பு எனது மூச்சு துணைக் கொண்டு
பரந்து, விரிந்த காற்று மண்டலத்தில்
உன் சுவாசக் காற்றைப் பின் தொடர்ந்து உன்னை
தேடுகிறேன்.... தேடுகிறேன்....

எண்கள் உலகில் குரலைக் கேட்டு,
ஓவிய உலகிலும், கனவுலகிலும் தரிசனம் தந்ததால்
மன நிம்மதியுடன் இருந்த நான்
கோர்வையைத் தொலைத்தால் மனம் தவியாய் தவிக்கிறதே..
நிஜ உலகில் தரிசனம் தரும் நாளைத்
தேடுகிறேன்... தேடுகிறேன்....

தியான உலகில் மெய் மறந்து
குயில் போன்று இனிக்கும் உன் குரலை நினைவு கூர்ந்து
உன்னை தரிக்க பரந்த உலகில் உயிரால்
தேடுகிறேன்... தேடுகிறேன்....

உனது உலகைக் கண்டு பிடித்தும்
உன்னை தரிசக்க முடியாமல் தவித்து
அடுத்த ஜென்மத்திலாவது தரிசித்து
உன்னுடன் இன்பமாய் வாழும் வாழ்வைத் தேடுகிறேன்....
தேடுகிறேன்... தேடுகிறேன்

எழுதியவர் : ஏழுமலை A (4-Apr-18, 12:09 pm)
சேர்த்தது : Ezhumalai
Tanglish : thedal
பார்வை : 244

மேலே